என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய பொருளாதார வளர்ச்சி
நீங்கள் தேடியது "இந்திய பொருளாதார வளர்ச்சி"
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
வாஷிங்டன்:
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் போன்ற திட்டங்களால் முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுப்பட்டதன் காரணமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சந்தை அபாயங்கள் அதிகரித்திருப்பதால் உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக குறையும் என்றும், வர்த்தக மோதல் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியும் குறையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது.
இதேபோல் சந்தை அபாயங்கள் அதிகரித்திருப்பதால் உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக குறையும் என்றும், வர்த்தக மோதல் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியும் குறையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
2017-18ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Indianeconomy #GDP
புதுடெல்லி :
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும்.
ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.
கடந்த நிதியாண்டில் நாட்டின், விவசாயம் 4.5 %, உற்பத்தி 9.1 % மற்றும் கட்டுமான துறைகள் 11.5 % என சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதர வளர்ச்சியில் இந்த மூன்று துறைகளும் முக்கிய பங்காற்றியுள்ளதாக புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றம், அலுமினியம் மற்றும் எக்கு பொருட்களுக்கு அமெரிக்க அதிகளவு வரி விதிப்பு, மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 % குறைந்துள்ளது. #Indianeconomy #GDP
×

X